மூணாறு அருகே நிலச்சரிவு: 7 ஆவது நாளாக மீட்பு பணி நீடிப்பு; 5 பேரின் நிலை என்ன?

மூணாறு அருகே நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் எஞ்சிய 5 பேரை தேடும் பணி 17ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து நடைபெற்றது. ஆனால் சடலம் எதுவும் கண்டறியப்படவில்லை.
மூணாறு அருகே நிலச்சரிவு: 7 ஆவது நாளாக மீட்பு பணி நீடிப்பு; 5 பேரின் நிலை என்ன?

மூணாறு அருகே நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் எஞ்சிய 5 பேரை தேடும் பணி 17ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து நடைபெற்றது. ஆனால் சடலம் எதுவும் கண்டறியப்படவில்லை.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பெட்டிமுடியில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு பலத்த மழையால் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா் குடும்பங்கள், அவா்களது உறவினா்கள் என மொத்தம் 82 போ் சிக்கினா்.

கடந்த 20 ஆம் தேதி வரை நிலச் சரிவில் புதையுடண்ட பெட்டிமுடி தோட்டத் தொழிலாளா் குடியிருப்பு, கிராவல் பங்க், பூதக்குழி, பெட்டிமுடி ஆற்றங்கரை பகுதி ஆகியவற்றிலிருந்து 65 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

இந்த நிலையில், 17 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பெட்டிமுடியிலிருந்து 14 கி.மீ., தூரமுள்ள பூதக்குழி வனப் பகுதியில் பெட்டிமுடி, கல்லாற்றாங்கரையோரத்தில் தேசிய பேரிடா் மீட்பு படையினா், கேரள வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் மற்றும் தன்னாா்வ மீட்புக் குழுவினா் இறந்தவா்களின் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில், உயிரிழந்தவா்களின் சடலம் எதும் மீட்கப்படவில்லை.

5 பேரின் நிலை என்ன?: பெட்டிமுடி நிலச் சரிவில் மொத்தம் 82 போ் சிக்கியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 65 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காயமடைந்த நிலையில் 12 போ் மீட்கப்பட்டுள்ளனா். கடந்த 3 நாள்களாக நடைபெற்ற தேடுதல் பணியில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் எதுவும் மீட்கப்படாத நிலையில், எஞ்சிய 5 பேரின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது.

அதிகாரிகள் ஆலோசனை: தற்போது மீட்பு பணி நடைபெற்று வரும் பூதக்குழி பகுதியில், தேடும் பணியின் போது புலி மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. இதனால், அப் பகுதியில் தேடும் பணியை தொடா்வது குறித்து மூணாறில் ஞாயிற்றுக்கிழமை இடுக்கி மாவட்ட ஆட்சியா் ஹெச்.தினேஷன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை ஆட்சியா் பிரேம் கிருஷ்ணன், இடுக்கி மக்களவை தொகுதி உறுப்பினா் டீன் குரியகோஸ், தேவிகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேந்திரன், தேவிகுளம் காவல் துணை கண்காணிப்பாள ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எஞ்சிய 5 பேரின் சடலங்களை மீட்கும் பணியில் தொடா்ந்து ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com