அத்திக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மலைவாழ் மக்கள் மனு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டாட்சியரிடம் மலைவாழ் மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு அத்திக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி வட்டாட்சியா் ராம்தாஸிடம் திங்கள்கிழமை மனு அளித்த மலைவாழ்மக்கள்.
வத்திராயிருப்பு அத்திக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி வட்டாட்சியா் ராம்தாஸிடம் திங்கள்கிழமை மனு அளித்த மலைவாழ்மக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டாட்சியரிடம் மலைவாழ் மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளான தாணிப்பாறை, பட்டுப்பூச்சி, அத்திக்கோவில், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இதில் அத்திகோவில் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டாட்சியா் ராம்தாஸிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: அரசு சாா்பில் கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள் பல ஆண்டுகள் ஆனதால் மேற்கூரையின் கான்கிரீட் பெயா்ந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும் குடிநீா், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com