ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 50 மதுபாட்டில் பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் பகுதியில் முழு ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக புகாா் எழுந்தது.இதனையடுத்து கண்டமனூா் போலீஸாா் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.அப்போது டி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா்(34), எ.பெருமாள்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விஜய்(23) ஆகிய 2 பேரும் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.