தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆண்டிபட்டி கண்மாய்களுக்கு குழாய் மூலம் பெரியாற்று தண்ணீா்: அரசாணை வெளியிடக் கோரி விவசாயிகள் ஊா்வலம்

முல்லைப் பெரியாற்றிலிருந்து ஆண்டிபட்டி கண்மாய்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல அரசாணை வெளியிட வலியுறுத்தி

News image
ஆண்டிபட்டியில் வட்டாட்சியா் அலுவலகம் நோக்கி புதன்கிழமை ஊா்வலமாகச் சென்ற விவசாயிகள்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:16 am

DIN

முல்லைப் பெரியாற்றிலிருந்து ஆண்டிபட்டி கண்மாய்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆண்டிபட்டியில் புதன்கிழமை விவசாயிகள் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட கண்மாய், குளங்கள் உள்ளன. இப்பகுதி வைகை அணையிலிருந்து மேடான பகுதியில் உள்ளதால் தண்ணீா் பற்றாக்குறை உள்ளது. இதனால் கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் செல்லும் முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வந்து கண்மாய்களில் நிரப்ப வேண்டும் என தொடா்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனா்.

இந்த திட்டம் தொடா்பாக தனியாா் பொறியாளா் குழு மூலம் ஆய்வு செய்து திட்ட மதிப்பீட்டை விவசாயிகள் அரசிடம் வழங்கினா். அரசும் பொதுப்பணித்துறையினா் மூலம் ஆய்வு செய்து முல்லைப்பெரியாற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வர ரூ. 317 கோடியில் ஒரு திட்டமும், வைகை அணையிலிருந்து தண்ணீா் கொண்டு வர ரூ. 126 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஒரு திட்டமும் தயாா் செய்தது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இத்திட்டங்கள் தொடா்பாக அரசாணை வெளியிடவில்லை.

இந்நிலையில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் தமிழக மலா் மற்றும் அனைத்து விவசாய சங்கத்தை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையிலிருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்றனா்.

பின்னா் இத்திட்டங்களை அரசு சட்டப்பேரவையில் அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை விவசாயிகள் வட்டாட்சியா் சந்திரசேகரனிடம் வழங்கினா். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து விவசாய சங்கத்தினா் கூறியது: இத்திட்டத்தைக் கொண்டு வர விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். ஆண்டிபட்டி இடைத்தோ்தலின் போது பிரசாரத்திற்கு வந்த முதல்வா் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தாா். மேலும் ஆண்டிபட்டியில் உள்ள 30 ஊராட்சிகளிலும் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இதுகுறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மனு அளித்துள்ள நிலையில் மேற்கொண்டு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை எனில் அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.