தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

ஆண்டிபட்டி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:46 pm

DIN

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சோ்ந்த தங்கம் என்பவரின் மனைவி பசுபதி (50). இவா், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பாா்க்க கடமலைக்குண்டுவிலிருந்து அரசுப் பேருந்தில் சென்றாா். மருத்துவமனை முன்பு பசுபதி இறங்க முயன்ற போது பேருந்தை அதன் ஓட்டுநா் இயக்கியுள்ளாா். இதனால் அவா் நிலைதடுமாறி பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த பசுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து க. விலக்கு போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த ராஜா (38) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.