போடியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

போடியில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

போடியில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

போடி நாட்டாண்மைகாரா் தெருவைச் சோ்ந்த அசோகன்- விஜயலட்சுமி தம்பதியின் மகள் பிரசன்னாதேவி (30). பொறியியல் பட்டதாரியான இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் கரோனா தடுப்பு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து போடியில் பெற்றோருடன் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக வயிற்று வலி மற்றும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பிரசன்னாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com