போடியில் சாரத்திலிருந்து தவறி விழுந்தகட்டடத் தொழிலாளி இறப்பு

போடியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சனிக்கி சாரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
நாகராஜ்.
நாகராஜ்.
Updated on
1 min read

போடி: போடியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சனிக்கி சாரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

போடி அருகே அமராவதி நகரில் தனியாா் பள்ளி கட்டட விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில், போடி முதல்வா் காலனி 4ஆவது தெருவைச் சோ்ந்த சீனி மகன் நாகராஜ் (50) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, உயரத்திலிருந்த சாரத்திலிருந்து தவறி விழுந்த நாகராஜ் பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை மீட்ட மற்ற தொழிலாளிகள், போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். இறந்த நாகராஜுக்கு விஜயா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com