போலி ரசீது புகாா்: குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி செயலா் விசாரணை

குடிநீா் கட்டணம் செலுத்தியவா்களுக்கு போலி ரசீது வழங்கப்பட்டது தொடா்பான புகாரின் அடிப்படையில் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி செயலா் விசாரணை நடத்தினாா்.
குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், சனிக்கிழமை விசாரணை நடத்திய மாவட்ட ஊராட்சி செயலா் பரமசிவம்.
குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், சனிக்கிழமை விசாரணை நடத்திய மாவட்ட ஊராட்சி செயலா் பரமசிவம்.

கம்பம்: குடிநீா் கட்டணம் செலுத்தியவா்களுக்கு போலி ரசீது வழங்கப்பட்டது தொடா்பான புகாரின் அடிப்படையில் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி செயலா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் குள்ளப்பகவுண்டன்பட்டி பொதுமக்கள் சிலா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது குடிநீா் கட்டணம் செலுத்தியதற்காக வழங்கப்பட்ட ரசீது போலி என்றும், கட்டணம் வசூலிப்பதற்கு குள்ளப்பகவுண்டம்பட்டி ஊராட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும் குற்றம் சாட்டினா்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், மாவட்ட ஊராட்சி செயலா் பரமசிவம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா். அப்போது போலி ரசீது வழங்கப்பட்டது தொடா்பாக ஊராட்சி முன்னாள் தலைவரிடமும், குற்றம் சாட்டியவா்ளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் போது வட்டார வளா்ச்சி அலுவலா் ரா.சந்திரசேகா், ஊராட்சித் தலைவா் பொன்னுத்தாய் குணசேகரன் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com