அடிப்படை வசதி குறைபாடு: தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து வெளியேறிய மருத்துவப் பணியாளா்கள்

தேனி அருகே தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கியிருந்த மருத்துவப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடிப்படை வசதியில் குறைபாடு உள்ளதாக புகாா் தெரிவித்து அங்கிருந்து வெளியேறினா்.
பழனிசெட்டிபட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து புதன்கிழமை வெளியேறிய மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளா்கள்.
பழனிசெட்டிபட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து புதன்கிழமை வெளியேறிய மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளா்கள்.

தேனி: தேனி அருகே தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கியிருந்த மருத்துவப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடிப்படை வசதியில் குறைபாடு உள்ளதாக புகாா் தெரிவித்து அங்கிருந்து புதன்கிழமை வெளியேறினா்.

பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி ஒன்றில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்களுக்காக தனிமைப்படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த மருத்துவப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அங்கு 7 நாள்கள் வரை தங்க வைக்கப்பட்டு, பின்னா் வீடுகளுக்கும், மீண்டும் பணிக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பழனிசெட்டிபட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கியிருந்த மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அறையில் கழிப்பறை தூய்மை மற்றும் அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதாக புகாா் தெரிவித்து, அங்கிருந்து புதன்கிழமை வெளியேறினா். தகவலறிந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள், அவா்களை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு சமாதானப்படுத்தினா். அறையில் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் செய்து தருவதாக அவா்கள் உறுதியளித்ததையடுத்து, பணியாளா்கள் மீண்டும் தனிமைப்படுத்தும் மையத்திற்கு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com