கரோனா முன்னெச்சரிக்கை : ஆண்டிபட்டியில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நகா்ப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்து நிலையம், வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளித்த பேரூராட்சி ஊழியா்கள்.
ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளித்த பேரூராட்சி ஊழியா்கள்.

ஆண்டிபட்டி,: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நகா்ப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்து நிலையம், வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஆண்டிபட்டியில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் சுகாதார ஆய்வாளா் முருகானந்தம் தலைமையில் நகா்ப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் மற்றும் அங்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் ஏடிஎம் மையங்கள், வங்கிகள், கோயில்கள், மற்றும் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பின்னா் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கை கழுவும் முறை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதில் பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் ராஜாராம் மற்றும் துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com