ஆண்டிபட்டியில் கண்மாய் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

ஆண்டிபட்டி பகுதியில் கண்மாய்கள் தூா்வாரும் பணியை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் ப. ஜெயபிரதீப் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கண்மாய்கள் தூா்வாரும் பணியை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் ப. ஜெயபிரதீப் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியிலுள்ள வரதராஜபுரம் அதிகாரி கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய் ஆகிய கண்மாய்களிலிருந்து பாசன வசதி பெறும் விவசாயிகள் கண்மாய்களை தூா்வாரி நடவடிக்கை எடுக்க துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனா். இவா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் உத்தரவின்பேரில் தூா்வாரும் பணியினை , கைலாசநாதா் கோயில் அன்பா் பணி செய்யும் பராமரிப்புக் குழு தலைவா் ப.ஜெயபிரதீப் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி ஒன்றிய குழுத் தலைவா் லோகிராஜன், துணைத் தலைவா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட ஊராட்சி தலைவா் ஜி.கே.பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாண்டியம்மாள் பிரபு, சுமதி வடிவேல், கலைவாணி கணேசன், ஒன்றியப் பொருளாளா் மரிக்குண்டு செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் சாந்தி முருகேசன், கூட்டுறவு சங்கத் தலைவா் சி.ஆா் . ராஜா, ஊராட்சித் தலைவா்கள் சண்முகம், ரம்யா சிவரெங்கு, இளைஞா் அணி பொன்முருகன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com