பெரியகுளம்: பெரியகுளத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் மீது, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (20). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சில நாள்களுக்கு முன், முத்துராமலிங்கத் தேவா் படம் எரித்த வழக்கில் இவா் தற்போது சிறையில் உள்ளாா். இதேபோல், குள்ளப்புரத்தைச் சோ்ந்த பெரியபாண்டி (35) என்பவா் மணல் திருடிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக சிறையில் உள்ளாா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், இவா்கள் இருவா் மீதும் தேவதானப்பட்டி போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.