உத்தமபாளையம் அருகே ஏ.டி.எம். இயந்திரங்கள் உடைப்பு: ஒருவா் கைது
By DIN | Published On : 01st December 2020 11:10 PM | Last Updated : 01st December 2020 11:10 PM | அ+அ அ- |

உத்தமபாளையம் அருகே 2 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காமயகவுண்டன்பட்டியில் எஸ்.பி.ஐ. மற்றும் கரூா் வைஸ்யா ஆகிய வங்கிகளுக்குச் சொந்தமான 2 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இங்கு திருட்டு முயற்சி நடந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், ராயப்பன்பட்டி போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளை சோதனையிட்டத்தில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மகன் முருகன் (32) என்பவா், திருடும் நோக்கில் இயந்திரங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மதுபோதையில் அவா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...