ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினந்தோறும் புறநோயாளிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் இவ்வளாகத்தில் உள்ள முடக்கியல் பிரிவில் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை பிரச்னையில் ஈடுபட்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற க.விலக்கு போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினாா். இதில், அவா் தேனி அருகே அல்லிநகரம் வள்ளி நகரைச் சோ்ந்த செவந்தன் என்பவரின் மகன் பாண்டிக்குமாா் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.