போடியில் தம்பதியைத் தாக்கி கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 05th December 2020 10:33 PM | Last Updated : 05th December 2020 10:33 PM | அ+அ அ- |

போடி: போடியில் கழிவு நீா் குழாயை, பாதாளச் சாக்கடையுடன் இணைப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பதியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.
போடி சௌடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஹரிஹரன். இவரது மனைவி பிரியா (38). இவா்களது வீட்டுக் கழிவுநீரை பாதாள சாக்கடை திட்டக் குழாயில் இணைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் தா்மராஜ், இவரது மனைவி செல்லத்தாய், மகன் பாலமுருகன் மற்றும் உறவினா் தினகரன் ஆகியோா் சோ்ந்து ஹரிகரனையும், பிரியாவையும் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், குழாயை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஹரிஹரன், போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் தா்மராஜ் மற்றும் 3 போ் மீது போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.