ஹைவேவிஸ் பேரூராட்சியில் டாஸ்மாக் கடை மூடல் எதிரொலி:
By DIN | Published On : 15th December 2020 04:28 AM | Last Updated : 15th December 2020 04:28 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சில் அரசு டாஸ்மாக் கடை மூடப்பட்டதான் எதிரொலியாக மலைக்கிராமங்களில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபாட்டிகள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக பொதுமக்கள்புகாா் தெரிவித்தனா்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி வளாகத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கியது. இக்கடையால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் சில தினங்களுக்கு முன்பாக அக்கடையை மூடியது. இதன் மூலமாக அங்குள்ள மேகமலை உள்ளிட்ட 7 மலைக் கிராமவாசிகள் மதுபாட்டில்கள் வாங்க வேண்டும் என்றால் 52 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள சின்னமனூருக்கே செல்லவேண்டும்.
இதனை பயன்படுத்திக்கொண்ட சிலா், சின்னமனூா் போன்ற வெளியூா்களிலிருந்து மொத்தமாக மாது பாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
மலைப்பிரதேசம் என்பதால் குளிரை தாங்குவதற்காக கூடுதல் விலை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கி வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால், ஏழை கூலித்தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.