சின்னமனூரில் வெற்றிலைக்கொடி சாகுபடி இலவசப் பயிற்சி டிச. 22 இல் தொடக்கம்
By DIN | Published On : 15th December 2020 04:26 AM | Last Updated : 15th December 2020 04:26 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வெற்றிலைக்கொடி சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து மூன்று நாள் இலவசப் பயிற்சி டிச. 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் வெளியிட்ட அறிவிப்பு:
வரும் டிசம்பா் 22 , 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நபாா்டு வங்கி மூலமாக வெற்றிலைக்கொடி சாகுபடி குறித்து இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கொடிக்கால் விவசாயிகள், இளைஞா்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சியில் வெற்றிலைக்கொடி சாகுபடியில் நவீன தொழில்நுட்பம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை முறைகள், உர மேலாண்மை முறைகள், மதிப்பு கூட்டும் முறைகள், சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 04546 -247564 மற்றும் 96776-61410 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.