குமுளி மலைச்சாலை மூடல்: கம்பமெட்டு சாலையில் வாகனங்கள் இயக்கம்
By DIN | Published On : 24th December 2020 11:38 PM | Last Updated : 24th December 2020 11:38 PM | அ+அ அ- |

தமிழக எல்லைப் பகுதியான குமுளி மலைச்சாலை வியாழக்கிழமை அடைக்கப்பட்டு, மாற்றுவழித்தடமாக கம்பத்திலிருந்து கம்பமெட்டு மலைச்சாலை வழியாக கேரளத்துக்கு அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் குமுளி மலைச்சாலையில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் வியாழக்கிழமை முதல் டிச. 30 ஆம் தேதி வரை அந்த சாலையை அடைக்கவும், மாற்றுவழித்தடமாக கம்பத்திலிருந்து கம்பமெட்டு மலைச்சாலை வழியாக சரக்கு, தொழிலாளா்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். அதன்படி வியாழக்கிழமை முதல் அனைத்து வாகனங்களும் கம்பமெட்டு வழியாக சென்று வருகின்றன. கம்பம் போக்குவரத்து காவல் துறையினா், கேரளம் செல்லும் பாதைகளில் அறிவிப்புப் பலகைகள் வைத்து கண்காணித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...