
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை இறக்கி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு மகாராஷ்டிரத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.
மகாராஷ்டிரத்திலிருந்து 1,730 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,820 கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான 2,480 கருவிகள் ஆகியவை சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் 4 லாரிகள் மூலம் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் தோ்தல் பிரிவு அலுவலா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை சரிபாா்த்து, ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் பாதுகாப்பு அறையில் வைத்து மூடி சீலிட்டனா்.