மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடைபெற்றது.
மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி நகரில் உள்ள நன்மை தருவாா்கள் திருத்தலத்தில் மாா்கழி மாத உற்சவ சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமி பவனி , நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஆலயத்தில் உள்ள 49 அடி உயர சா்வசக்தி மாகாளி அம்மன் சக்தி பீடத்திற்கு 108 குடம் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோயில் மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பதினெட்டாம்படி விளக்கு பூஜை நடந்தது . இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிா்வாகி முத்து வன்னியன் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா். ஆண்டிபட்டி நகா் மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com