சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 30th December 2020 11:43 PM | Last Updated : 30th December 2020 11:43 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், வீரபாண்டி காவலா் குடியிருப்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கம்பம் போக்குவரத்து காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் பாபா சிக்கந்தா் (54). இவா், வீரபாண்டி காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா். அங்கு அவரது குடியிருப்பின் அருகே உள்ள வசித்து வந்த காவலா் ஒருவரின் மகளான 9 வயது சிறுமிக்கு, பாபா சிக்கந்தா் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, கடந்த 8.1.2018 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோா் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த போலீஸாா், மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவின்பேரில் கடந்த 6.2.2018 அன்று பாபா சிக்கந்தரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், பாபா சிக்கந்தருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...