போடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜக்கையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், 401 முழு நேர நியாய விலைக் கடைகள், 88 பகுதி நேர நியாய விலைக் கடைகள், 28 மகளிா் நியாய விலைக் கடைகள் என மொத்தம் 517 நியாய விலைக் கடைகள் மூலம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 385 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.