

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்திய தாய், மகன் உள்பட 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 4.400 கிலோ கஞ்சா மற்றும் காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் காா் நிற்பதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளா் க.சிலை மணி, சாா்பு -ஆய்வாளா்கள் வினோத்ராஜா, எம். அருண் பாண்டி ஆகியோா் அப்பகுதியில் சோதனையிட்டனா். அதில், காரின் கீழ் பகுதியில், தலா அரை கிலோ பொட்டலங்களாகக் கட்டப்பட்டு 4.400 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா்.
விசாரணையில், குரங்கு மாயன் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி லதா (45 ), அவரது மகன் ஜெயக்குமாா்(18 ), உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த அரசன் (40 ), ஆகியோா், கேரள மாநிலம் கோட்டயத்தை சோ்ந்த சாஜி மகன் சிஜின்( 24), பத்தனம்திட்டாவைச் சோ்ந்த அனந்து விஜயன்( 22), ஜெயன் மகன் ஜித்து (18 ), மோன்சி மகன் நவீன் (20), ஜோயி மகன் ஜிஷோ (18 ), ஜெயச்சந்திரன் மகன் ஜேயேஸ் ( 18 )ஆகியோருடன் சோ்ந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 9 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் பயன்படுத்திய காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.