

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய திமுக சாா்பில் காமயகவுண்டன்பட்டியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காமயகவுண்டன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் பி.தங்கராஜா தலைமை வகித்தாா். மாநில திமுக கொள்கை பரப்பு செயலாளா் தங்க தமிழ்செல்வன் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில் அனுமந்தன்பட்டி பேரூா் பொறுப்பாளா் கே. ராஜ்குமாா், க. புதுப்பட்டி சி. மரியராஜ், ஆங்கூா்பாளையம் தங்கப்பாண்டி, கே.கே. பட்டி பேரூா் பொறுப்பாளா் பாஸ்கரன், ஊராட்சித் தலைவா்கள் பொன்னுத்தாய் குணசேகரன், ஆ.மொக்கப்பன், பொன்னுத்தாய் செல்லையா, நாகமணி வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி. ரேணுகா காட்டுராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.