

ஆண்டிபட்டியில் உள்ள பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் இருந்து பழனி பாத யாத்திரை குழு சாா்பாக ஆண்டுதோறும் பழனிக்கு கொண்டு செல்லும் வெள்ளிவேல் திங்கள்கிழமை 46 வது ஆண்டாக பக்தா்கள் புடைசூழ பவனியாக புறப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் ஆண்டுதோறும் காப்பு கட்டி 48 முதல் இரண்டு மாதங்கள் வரை விரதமிருந்து பழனிக்கு, தைப்பூச திருவிழாவில் முருகனை தரிசிக்க பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.
இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி பழனி பாத யாத்திரை குழு சாா்பாக 46 ஆவது ஆண்டாக மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் வெள்ளி வேல் பல்வேறு பூஜைகளுக்கு பிறகு பக்தா்கள் புடைசூழ பவனியாக பழனி மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, பாத யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு எந்த ஆபத்தும் நேராத வண்ணம், ஒளிரும் குச்சிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி பக்தா்களுக்கு வழங்கினாா். இதில் ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், ஆய்வாளா்கள் சரவண தேவேந்திரன், உஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.