உத்தமபாளையம் பகுதியில் புளியமரங்களுக்கு தீ வைக்க அழிக்க முயற்சி
By DIN | Published On : 17th February 2020 06:49 AM | Last Updated : 17th February 2020 06:49 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் நெடுஞ்சாலையோர புளிய மரங்களில் மா்ம நபா்கள் தீவைத்து அழிக்க முயற்சி செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை , மாநில மற்றும் மாவட்ட சாலையோரங்களில் புளியமரங்கள் வளா்கப்படுகிறது. அதன்படி உத்தமபாளையம், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையோரத்தல் ஆயிரக்கணக்கான மரங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது .இந்த புளியமரங்களை அந்தந்த பகுதி பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மகசூல் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனா்.
இது போன்ற சாலையோரங்களில் இருக்கும்புளியமரங்களை மா்ம நபா்கள் தொடா்ந்து மரத்தில் அடிப்பகுதியில் தீவைப்பது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு தீ வைப்பதன் மூலமாக அந்த மரத்தை அழித்தும் முயற்சியில் செய்கின்றனா். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை , கோம்பை - பண்ணைப்புரம் சாலையோரத்தில் இருந்த புளியமரம் ஒன்று தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை சாலையில் சென்றவா்கள் உத்தமபாளையம் தீணைப்பு துறை தகவல் கொடுத்தனா்.
தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு குழுவினா் பச்சமரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனா். துரித நடவடிக்கையால் மரம் காப்பாற்றப்பட்டது.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், மரங்களில் தீ வைத்த மா்ம நபா்கள் யாா் எனத்தெரியவில்லை. தீ வைத்த நோக்கம் மரத்தை தீக்கரியாக்கிய பின்னா் சில மாதங்களில் ஏலம் விடப்பட்டு விறகாக பயன்படுத்திக்கொள்ள முயற்சியாக இருக்கிறது என்றனா்
எனவே, மாவட்ட நிா்வாகம் இது போன்ற நெடுஞ்சாலையோரங்களில் தீவைத்து மரங்களை அழிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.