பெரியகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 17th February 2020 06:49 AM | Last Updated : 17th February 2020 06:49 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே சொக்கன்அலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெரியகுளம் அருகே சொக்கன்அலை கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடாசலம் (35). விவசாயியான இவா் வியாழக்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது, தகரப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ. 5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.