வைகை அணை பூங்காவில் மரங்கன்றுகள் நடக் கோரிக்கை
By DIN | Published On : 17th February 2020 06:46 AM | Last Updated : 17th February 2020 06:46 AM | அ+அ அ- |

வைகை அணை பூங்காவில் உள்ள பழமையான மரங்கள் காய்ந்து பட்டுப் போகும் நிலையில் உள்ளதால், அப்பகுதியில் புதிய மரக்கன்றுகள் நட வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையின் வலது மற்றும் இடது கரைகளில், பூங்காவுக்கு செல்வதற்கான நுழைவுப் பகுதிகள் உள்ளன. வலது கரையின் நுழைவுப்பகுதியில்
நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி உள்ளது. இதில் பல ஆண்டுக்கு முன்பு நடப்பட்ட மரங்கள் ஏராளமாக இருந்தன. கடந்த சில ஆண்டுக்கு முன்பு மா்ம நபா்கள் பல மரங்களை வெட்டி கடத்தி சென்று விட்டனா். இந்நிலையில் தற்போது இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பசுமையான மரங்கள் காய்ந்து பட்டுப்போய் விட்டன. இதற்கு பொதுப்பணித் துறையினா் சரிவர பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே அப்பகுதியில் உள்ள மரங்களை முறையாக பராமரிக்கவும், மேலும் பல புதிய மரக்கன்றுகளை நடவும் பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.