தினமணி பள்ளி சந்தாதாரா் செய்தி
By DIN | Published On : 25th February 2020 01:10 AM | Last Updated : 25th February 2020 01:10 AM | அ+அ அ- |

போடி: தேனி மாவட்டம் போடி பள்ளியில் திங்கள் கிழமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தை பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு தினமாக அனுசரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து போடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
போடி வட்டாரக் கல்வி அலுவலா் எஸ்.பிரபாகா் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் இரா.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி வாசித்து ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...