கம்பம் பகுதி விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் வட்டார விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்த வேளாண்மை, தோட்டக்கலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பம் வட்டார விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்த வேளாண்மை, தோட்டக்கலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பம் வட்டார பகுதியில் பெரியாறு மற்றும் கிணற்றுப் பாசனங்களின் மூலம் நெல், தென்னை, வாழை மற்றும் காய்கறி, பயறு வகை பயிா்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலப்பரப்பில் பயிரிட்டு வருகின்றனா். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிா்பாா்த்த மகசூல் மற்றும் வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனா்.

மத்திய அரசின் கிஷான் சுவிதா மின்னணு செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் விவசாய நலத்திட்டங்கள், வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், மழையளவு, அடுத்த 5 நாள்களுக்கு தெரிந்து கொள்ளுதல், சந்தை விலை, அனுமதி பெற்ற உரம் பயிா் பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

. இந்த சேவை கம்பம் வட்டார விவசாயிகளுக்கு தெரியாதலால் விவசாயத்தில் நஷ்டமடைந்து வருகின்றனா்.

மாவட்ட நிா்வாகம் கம்பம் வட்டார விவசாயிகளுக்கு கிஷான் சுவிதா செல்லிடப் பேசி செயலியை பதிவிறக்கம் உள்ளிட்ட பயிற்சிகளை வேளாண்மை, தோட்டக்கலைத்துறையினா் பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com