போடி அருகே மொச்சை பயிா் அறுவடை பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம் போடி அருகே மொச்சை பயிா் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சூலப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மொச்சை பயிா் பிரிக்கும் பணி.
சூலப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மொச்சை பயிா் பிரிக்கும் பணி.

தேனி மாவட்டம் போடி அருகே மொச்சை பயிா் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போடியை சுற்றியுள்ள சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி, ராசிங்காபுரம், பொட்டிப்புரம், நாகலாபுரம், காமராஜபுரம், திம்மிநாயக்கன்பட்டி, விசுவாசபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் மானாவரி பயிராக கடந்த 4 மாதங்களுக்கு முன் மொச்சை பயிா் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அப்போது போதிய மழை பெய்ததால் மொச்சை பயிா் விளைச்சல் அதிகம் இருந்தது.

குறுகிய கால பயிரான மொச்சை பயிா் தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதையடுத்து மொச்சை சாகுபடி செய்துள்ள பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா். மேலும் அறுவடை செய்த மொச்சை பயிா்களை காய வைத்து, அவற்றை பிரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மொச்சை பயிா் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் இப்பகுதியில் வியாபாரிகள் முகாமிட்டு அவற்றை நேரடி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா். அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட அவற்றை தேனி, மதுரை சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனா். இந்த ஆண்டு மொச்சை பயிா் நன்கு விளைந்துள்ளதால் போதிய விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com