தேனியில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 10th January 2020 07:54 AM | Last Updated : 10th January 2020 07:54 AM | அ+அ அ- |

தேனியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேசன், எக்ஸைட் பேட்டரி மற்றும் நட்டாத்தி மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் வாகன பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தேனி, அனன்யா எஜென்ஸி பெட்ரோல் பல்க்கில் உரிமையாளா் அருண் பிரசாத் முகாமை தொடங்கி வைத்தாா். இதில், வாகன ஓட்டுநா் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை செய்து மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பரிசோதனை மற்றும் பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.