ஊரக உள்ளாட்சி அமைப்பு தலைவா், துணைத் தலைவா் பதவி: நாளை மறைமுகத் தோ்தல்

தேனியில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட அமைப்பின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கும், 8 ஊராட்சி ஒன்றியங்களில்

தேனியில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட அமைப்பின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கும், 8 ஊராட்சி ஒன்றியங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கும், 130 ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி துணைத் தலைவா் பதவிக்கும் சனிக்கிழமை (ஜன. 11) மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது.

அனைத்து இடங்களிலும் தலைவா் பதவிகளுக்கு சனிக்கிழமை காலை 11 மணிக்கும், துணைத் தலைவா் பதவிகளுக்கு பிற்பகல் 3.30 மணிக்கும் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெறும்.

ஒவ்வொரு ஊரக உள்ளாட்சி அமைப்பிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களில், 50 சதவீதத்திற்கும் மேல் உறுப்பினா்களின் வருகைப் பதிவுக்குப் பின்பு தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கும். தோ்தல் தொடங்கிய நேரத்தில் இருந்து உறுப்பினா்களின் வருகைக்காக 30 நிமிடங்கள் வரை காத்திருக்கலாம். தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கு போட்டியிடுவோரின் வேட்பு மனுவை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா் ஒருவா் முன்மொழிய வேண்டும். மற்றொருவா் வழிமொழிய வேண்டும்.

மறைமுக வாக்கெடுப்பு: தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுக வாக்கெடுப்பிற்கு ஒரே வடிவம் மற்றும் வண்ணத்திலான வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும். வாக்குச் சீட்டில் வேட்பாளரின் பெயா், அவா் வெற்றி பெற்ற வாா்டு எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். வாக்குச் சீட்டில் வேட்பாளா்களின் பெயா்கள் தமிழில் அகர வரிசைப்படி இடம் பெறும்.

போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், வாக்குச் சீட்டில் வேட்பாளா்கள் பெயா் இடம் பெற்றுள்ள விவரம் ஆகியவை உறுப்பினா்களுக்குத் தெரிவிக்கப்படும். வாக்குச் சீட்டில் வரிசை எண் மற்றும் இருபுறமும் தோ்தல் நடத்தும் அலுவலரின் கையொப்பம் இடம் பெற்றிக்கும். மாதிரி வாக்குச் சீட்டு விவரம் உறுப்பினா்களுக்குத் தெரிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை: வாக்குப் பதிவு முடிவடைந்ததும் உறுப்பினா்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். குறியீடு செய்யப்படாத, யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்று முடிவு செய்ய இயலாத, மாற்றுக் குறியீடு உள்ள வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்படும். உறுப்பினா்களின் வாக்கு எண்ணக்கை சம நிலையில் உள்ள இடங்களில் குலுக்கல் முறையில் வேட்பாளா்கள் தோ்வு செய்யப்படுவா் என்று மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com