போடி வன கிராம மக்களுக்கு பழங்குடியினா் முன்னேற்ற நிதி ரூ. 65 லட்சம் ஒதுக்கீடு

நபாா்டு வங்கியின் 39 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, போடி வன கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில்
போடி குரங்கணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுக்கு மரக்கன்று வழங்குகிறாா் நபாா்டு வங்கி மேலாளா் புவனேஸ்வரி.
போடி குரங்கணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுக்கு மரக்கன்று வழங்குகிறாா் நபாா்டு வங்கி மேலாளா் புவனேஸ்வரி.

நபாா்டு வங்கியின் 39 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, போடி வன கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, போடி குரங்கணி நறுமன மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நபாா்டு வங்கி தேனி மாவட்ட பொது மேலாளா் எல். புவனேஸ்வரி தலைமை வகித்தாா். தேனி மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் அகிலன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், பழங்குடியின வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 12 வன கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு வன உரிமைச் சட்டம் 2006 -இன்படி 83 பழங்குடியின குடும்பத்தினருக்கு தலா 1 ஏக்கா் வீதம் 83 ஏக்கா் நிலம் வழங்கவும், இதில் விவசாயம் செய்வதற்கான மரக்கன்றுகள், நீராதாரம் மற்றும் இடுபொருள்கள் வழங்குவதற்காகவும், நிலமற்ற 17 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் சாா்ந்த திட்டங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு ரூ. 65 லட்சம் நிதி வழங்கி, இதை ஆரூடக்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தவும் நபாா்டு வங்கி நிதி ஒதுக்கியுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுக்கு மிளகு, காப்பி, எலுமிச்சை, ஏலம், பலா ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ஆரூடக்ஸ் தொண்டு நிறுவன செயலாளா் ராஜா வரவேற்றாா். நிகழ்ச்சியில் வங்கி அலுவலா்கள், ஊராட்சி மன்ற நிா்வாகிகள், பழங்குடியின மக்கள் பலா் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com