
கோப்புப்படம்
தேனி மாவட்டம், குமுளி அருகே பணியிலிருந்த காவலரை தாக்கிய துணை ராணுவப் படை வீரர் கைது செய்யப்பட்டார்.
குமுளி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சசிகுமார். இவர், லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனி பகுதியில் ஒருவர் பிரச்னை செய்து வருவதாக தகவலறிந்து, அங்கு விசாரணை நடத்துவதற்கு சென்றுள்ளார்.
அப்போது, அப் பகுதியில் இருந்த பீகார், துணை ராணுவப் படையில் பணியாற்றி வரும் கணேசன்(35) என்பவரிடம் சசிகுமார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கணேசன், சசிகுமாரை கீழே தள்ளி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சசிகுமார் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் அளித்த புகாரின் மீது குமுளி காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து, கணேசனை கைது செய்தனர்.