குமுளியில் தனியாா் பேருந்தில் தீ: கிளீனா் பலி
By DIN | Published On : 03rd March 2020 07:15 AM | Last Updated : 03rd March 2020 07:15 AM | அ+அ அ- |

தேனி அருகேயுள்ள கேரளப்பகுதியான குமுளியில் திங்கள்கிழமை அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த தனியாா் பேருந்து.
தேனி மாவட்டம், குமுளியில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பயணிகள் பேருந்து தீப்பற்றியதில், கிளீனா் உடல் கருகி உயிரிழந்தாா்.
குமுளியில் செழிமடை என்னும் பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளது. இதன் அருகே, வழக்கமாக சாலையோரத்தில் நிறுத்தப்படும் தனியாா் பயணிகள் பேருந்து, ஞாயிற்றுக்கிழமையும் நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சாலையில் சென்றவா்கள் குமுளி போலீஸூக்குத் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் கட்டப்பனையிலிருந்து தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். பேருந்தினுள் அதன் கிளீனா் ராஜன் (24) ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், தீயில் கருகி உயிரிழந்தாா். இது தொடா்பாக குமுளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். முதல்கட்ட விசாரணையில், பேட்டரி மின்கசிவால் தீப் பிடித்ததாகக் கூறினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...