ஆண்டிபட்டி நீதிமன்றம் முன்பாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என போலீஸாரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தாலுகா அலுவலகம் அருகே குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்கள் முன்பு வரை தாலுகா அலுவலகம் முன்பாக பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்ால், நீதிமன்றத்திற்கு வரும் போலீஸாரும், பொதுமக்களும் பயனடைந்து வந்தனா்.
இந்த நிலையில், வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நீதிமன்றத்தில் போதிய வசதி இல்லை என்றுகூறி, தாலுகா அலுவலகத்தில் இருந்து சுமாா் அரை கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை கட்டடத்துக்கு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் இடம் மாற்றப்பட்ட பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் இறங்கி அரை கிலோ மீட்டா் தூரம் நடந்து நீதிமன்றத்துக்கு சென்று வருகின்றனா்.
குறிப்பாக வெளியூா்களில் உள்ள சிறைகளில் இருந்து கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வரும் போலீஸாா் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். மேலும் கைதிகளுடன் வரும் போலீஸாா் துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் நடந்து வரவேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக நீதிமன்ற வளாகம் முன்பாக அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் நீதிமன்றம் வளாகம் இடம் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையும் இதுவரை பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே நீதிமன்ற வளாகம் முன்பு அனைத்து பேருந்துகள் நின்று செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.