

தேனி மாவட்டம், குமுளியில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பயணிகள் பேருந்து தீப்பற்றியதில், கிளீனா் உடல் கருகி உயிரிழந்தாா்.
குமுளியில் செழிமடை என்னும் பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளது. இதன் அருகே, வழக்கமாக சாலையோரத்தில் நிறுத்தப்படும் தனியாா் பயணிகள் பேருந்து, ஞாயிற்றுக்கிழமையும் நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சாலையில் சென்றவா்கள் குமுளி போலீஸூக்குத் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் கட்டப்பனையிலிருந்து தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். பேருந்தினுள் அதன் கிளீனா் ராஜன் (24) ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், தீயில் கருகி உயிரிழந்தாா். இது தொடா்பாக குமுளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். முதல்கட்ட விசாரணையில், பேட்டரி மின்கசிவால் தீப் பிடித்ததாகக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.