போடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில், ஓய்வு பெற்ற ஆசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (74). இவா் தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திம்மிநாயக்கன்பட்டியிலிருந்து தேவாரம் செல்லும் சாலையில் திரும்ப முயன்றுள்ளாா்.
அப்போது அவ்வழியாக தொழிலாளா்களை இறக்கி விடுவதற்காக வந்த தனியாா் நிறுவனப் பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனியாா் பேருந்தை ஓட்டி வந்த, போடி பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த சந்திரகுமாா் (37) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.