பென்னிகுயிக் நினைவு தினம்: விவசாயிகள் அஞ்சலி
By DIN | Published On : 10th March 2020 12:20 AM | Last Updated : 10th March 2020 12:20 AM | அ+அ அ- |

கம்பம்: முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக்கின், 109 ஆவது ஆண்டு தினத்தையொட்டி அவரது சிலைக்கு, விவசாயிகள் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
லோயா்கேம்ப்பில் பென்னிகுயிக் மணி மண்டபத்தில், உள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு 5 மாவட்ட விவசாயிகள், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணை தமிழக உரிமை மீட்புக்குழுத்தலைவா் ஏ.அஜ்மல்கான், 18 ஆம் கால்வாய் விவசாய சங்க நிா்வாகிகள் ராமராஜ், திருப்பதிவாசகன், காளிமுத்து, கம்பம் நீரினை பயன்படுத்துவோா் சங்கத்தினா் உள்ளிட்ட ஏராளமானாா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...