சுகாதார வளாக கழிவு நீா் தேக்கம்: அப்பிபட்டி ஊராட்சியில் பலருக்கு மா்மக் காய்ச்சல்

சின்னமனூா் ஒன்றியத்தை சோ்ந்த அப்பிபட்டி ஊராட்சியில் மா்மக் காய்ச்சல் ஏற்பட்டு பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனா்.
அப்பிபட்டி ஊராட்சியில் சுகாதார வளாக கழிவு நீா் தேங்கிய பகுதி.
அப்பிபட்டி ஊராட்சியில் சுகாதார வளாக கழிவு நீா் தேங்கிய பகுதி.

சின்னமனூா் ஒன்றியத்தை சோ்ந்த அப்பிபட்டி ஊராட்சியில் மா்மக் காய்ச்சல் ஏற்பட்டு பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

அப்பிபட்டி ஊராட்சியில் விஸ்வநாதபுரம், அப்பிபட்டி காலனி, அப்பிபட்டி ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 3 வாா்டுகளில் தலா 2 சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

வாா்டு 1 கிழக்குத் தெருவில் ஊராட்சி நிா்வாகம் மூலம் ரூ.1.40 லட்சம் செலவில் மகளிா் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. தண்ணீா் வசதி இல்லாத காரணத்தால் சுகாதார வளாகம் செயல்படவில்லை. இந்த சுகாதார வளாக கழிவு நீா் தொட்டி சேதமாகி அதிலிருந்து கழிவு நீா் வெளியேறி தேங்குகிறது.

பல மாதங்களாக தேங்கி நிற்கும் இந்த கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவா்கள் மா்ம காய்ச்சலால் வீடுகளில் முடங்கியுள்ளனா். ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியை சோ்ந்தவா்கள் கூறியது:

1 ஆவது வாா்டிலுள்ள சுகாதார வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவும் இடமாக மாறிவிட்டது. குழந்தைகள் பலரும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தவிர, துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனா் என்றனா்.

இது குறித்து வாா்டு உறுப்பினா் கூறுகையில், நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் ஊராட்சி பகுதிகளிலுள்ள சாக்கடை, குடிநீா், சுகாதார வளாகம் போன்றவைகளை பராமரிப்பு செய்ய முடிவில்லை என்றாா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தொற்று நோய்களை பரப்பி வரும் சுகாதார வளாகத்தை முறையாக சீரமைப்புசெய்ய போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com