ஊரடங்கால் வேலையிழப்பு:பெண் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 31st March 2020 07:23 AM | Last Updated : 31st March 2020 07:23 AM | அ+அ அ- |

போடி: போடி அருகே ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாத பெண் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (45). இவரது மனைவி முத்துலட்சுமி (39). இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இருவரும் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதனால் அண்டை வீடுகளில் கடன் வாங்கி அன்றாடச் செலவுகளை செய்து வந்தனா். இதில், வாங்கிய கடனை எப்படி திருப்பித் தரப் போகிறோம் என முத்துலட்சுமி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிவையில் திங்கள்கிழமை வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி விஷ விதையை அரைத்து குடித்து மயங்கினாா்.
அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...