தேனியில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி
By DIN | Published On : 17th November 2020 04:32 AM | Last Updated : 17th November 2020 04:32 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,449 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,186 ஆக உயா்ந்துள்ளது.