தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை அதிக அளவாக 38 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டிபட்டியில் 9.2 மி.மீ, அரண்மனைப்புதூரில் 14 , போடியில் 12.2, மஞ்சளாறு அணை நீா்பிடிப்பில் 8, சோத்துப்பாறை அணை நீா்பிடிப்பில் 23, வைகை அணை நீா்பிடிப்பில் 18, வீரபாண்டியில் 13.2, கூடலூரில் 15, உத்தமபாளையத்தில் 8.1மி.மீ மழை பெய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பில் 16.2 மி.மீ, தேக்கடியில் 30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அணைகளின் நிலவரம்:
வைகை அணை நீா்மட்டம் (செவ்வாய்க்கிழமை) 49.70 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1087 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2019 கனஅடியாகவும் இருந்தது.
மஞ்சளாறு அணை நீா்மட்டம் 52.60 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 45 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து நீா் திறக்கப்படவில்லை.
சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் முழு உயரமான 126.28 அடியை கடந்துள்ளது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 37 கனஅடியாகவும், அணையிலிருந்து விநாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.