தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு பள்ளி மாணவா்கள் 6 பேருக்கு மருத்துவப் படிப்புக்கான ஆணை வழங்கல்
By DIN | Published On : 21st November 2020 10:36 PM | Last Updated : 21st November 2020 10:36 PM | அ+அ அ- |

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான ஆணைகளை சனிக்கிழமை வழங்கிய கல்லூரி முதன்மையா் மருத்துவா் இளங்கோவன்.
ஆண்டிபட்டி: அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவா்களுக்கு, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான அரசாணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நடைபெற்ற மருத்துப்படிப்பிற்கான கலந்தாய்வில் தமிழக அளவில் ஏராளமான அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகினா்.
இந்நிலையில், அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் 6 பேருக்கு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பு படிப்பதற்கான அரசாணைகளை, கல்லூரி முதன்மையா் மருத்துவா் இளங்கோவன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் சிவக்குமரன், துணை நிலைய அலுவலா் மருத்துவா்கள் ஈஸ்வரன் மற்றும் மருத்துவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...