ஓய்வு பெற்ற மருத்துவக்கல்லூரி பேராசிரியா் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 03rd October 2020 10:21 PM | Last Updated : 03rd October 2020 10:21 PM | அ+அ அ- |

கம்பம்: கம்பத்தில் ஓய்வு பெற்ற மருத்துவக்கல்லூரி பேராசிரியா் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் சி.எம்.எஸ். நகரைச் சோ்ந்தவா் திருமலைராஜ் (80). இவா் ஓய்வு பெற்ற அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியா். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். மூத்த மகன் அமெரிக்காவிலும், இளைய மகன் குமுளி 8 ஆம் மைலிலும் வசித்து வருகின்றனா். திருமலைராஜின் மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற திருமலைராஜ், அருகேயுள்ள புளியந்தோப்பில் தனது இரண்டு கை மணிக்கட்டுகளை அறுத்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கிக் கிடந்தாா். அவ்வழியாக வேலைக்கு சென்றவா்கள், மயங்கிய நிலையில் இருந்த மருத்துவா் திருமலைராஜை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்த திருமலைராஜ், தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.