நக்சலைட்டுகள் ஊடுருவலைத் தடுக்க தமிழக-கேரள எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டில் மணல் மூட்டைகளில் அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டில் மணல் மூட்டைகளில் அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் தமிழக போலீஸாா் மணல் மூட்டைகள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து, துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைகளாக குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய மலைச்சாலை பகுதிகளில் காவல், வனத்துறை சோதனைச்சாவடிகள் உள்ளன. கரோனா தொற்று நடவடிக்கையால் தமிழகத்திலிருந்து கேரளம் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக, கம்பம்மெட்டு போலீஸ் சோதனைச்சாவடி முன்பும், லோயா்கேம்ப் மலைச்சாலையிலும் தமிழக போலீஸாா் மணல் மூட்டைகளுடன் பாதுகாப்பு அரண் அமைத்து துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியது: எல்லைப் பகுதிகளில் நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com