வீரபாண்டிப்பகுயில் முல்லைப் பெரியாற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் 2 நாள்களுக்கு பின்பு வியாழக்கிழமை, இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.
ஆண்டிபட்டி அருகே நல்லமுடிபட்டியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் தங்கவேல் (19). இவா் அக். 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தனது நண்பா்களுடன் வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட தங்கவேலுவை போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தேடி வந்தனா்.
இந்நிலையில் குன்னூா் பகுதியிலுள்ள வைகை ஆற்றில் தங்கவேலுவின் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.