ஆண்டிபட்டி ஒன்றிய கிராமங்களில்புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி ஊராட்சியில் புதிய பேவா் பிளாக் பதிக்கும் பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆ. லோகிராஜன்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மொட்டனூத்து ஊராட்சிக்குள்பட்ட ஆசாரிபட்டி கிராமத்தில் நான்கு தெருக்களில் பேவா் பிளாக் பதித்தல் மற்றும் சிமென்ட் சாலை பணிகளுக்காக ரூ. 17 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி முத்தனம்பட்டி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பேவா் பிளாக் பதிக்கும் பணிகள் ஆகியவற்றை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லோகிராஜன் தொடக்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆண்டாள், ஜெயகாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோவில்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா்கள் சுமதி வடிவேல், கலைவாணி கணேசன், ஊராட்சித் தலைவா்கள் கருப்பு என்ற ராஜன், தங்கப்பாண்டி, ரத்தினம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com