

உத்தமபாளையத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு நாள் பாஜக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாபில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, உத்தமபாளையம் பாஜக நகர தலைவர் தெய்வம் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க. பொன்ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சாதனைகளை பற்றி மாவட்ட பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.
நகர துணைத் தலைவர் சாமிநாதன், கிளை தலைவர் ஈஸ்வரன் உட்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.